மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடமைப்புத் தொகுதியிலுள்ள உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு முன்பாக வித்தியாசமாகவும் சந்தேகத்திற்கிடமான முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உறுப்பினர்கள் காலை வீட்டில் இருந்து வெளியே வந்த போது, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததாக, பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ வினவிய போது, இந்த சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இராணுவ அதிகாரிகள்
இச்சம்பவத்தின் பின்னர் உறுப்பினர் வீட்டுக்கு அருகிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த இராணுவ அதிகாரிகள் குழுவொன்று அதே வீட்டுத் தொகுதியில் உள்ள வேறொரு இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இராணுவ அதிகாரிகள் குழு மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வந்தவர்களாகும்.
வீட்டுத் தொகுதி
கடந்த போராட்டத்தின் போது களமிறங்கியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் இருந்து இந்த இராணுவ அதிகாரிகளை அகற்றுவதற்கான உத்தரவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நரேந்திர பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.