மெக்சிகோ வளைகுடாவுக்கு அருகில் உள்ள கேமருன் பாரீஸ் பகுதியில் லூசியானா கடற்கரையில் அரிய வகையான இளஞ்சிவப்பு நிற டொல்பின்கள் நீந்தி உள்ளன.
இதனை அந்த கடற்கரையில் சுமார் 20 ஆண்டுகளாக மீன் பிடித்து வரும் துர்மன் கஸ்டின் என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த காணொளி வைரலாகி வருகிறது.
இந்த வகை டொல்பின்கள் மிகவும் அரிதானவை. பொதுவாக மிருகங்களிடம் காணப்படும் அல்பினோ என்ற நிறமி குறைபாடு காரணமாக இவை இந்த நிறத்தில் காணப்படுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
அல்பினோ குறைபாடு
அரிய வகை டொல்பின்கள் குறித்து துர்மன் கஸ்டின் கூறுகையில், நான் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடற்கரையில் இந்த டொல்பின்களை பார்த்தேன். உடனே கேமராவில் படம் எடுக்க ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்தில் அந்த டொல்பின்கள் எனது படகுக்கு அருகில் வந்தது. அதில் ஒன்று பெரியது. மற்றொன்று சிறியது. அவை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.