கடந்த 55 ஆண்டுகளில் கனடாவில் ஆட்சி செய்த பிரதமர்களில் மிக மோசமான பிரதமராக தற்போதைய பிரதமர் ட்ரூடோ பட்டியலிடப்பட்டுள்ளார்.
கனடிய வரலாற்றில் மிக மோசமான பிரதமர் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் ஜஸ்ரின் ட்ரூடோ அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 30 வீதமானவர்கள் மோசமான பிரதமராக ட்ரூடோவை கருதுகின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய பத்து பேரில் மூன்று பேர் தற்போதைய பிரதமரே ஒப்பீட்டளவில் மிகவும் மோசமானவர் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
பிரபல்யமான பிரதமர்
இதேவேளை, பிரதமரின் தந்தையான முன்னாள் பிரதமர் பியே ட்ரூடோ மிகவும் பிரபல்யமான பிரதமர் என்ற வரிசையில் முன்னிலை வகிக்கின்றார்.
அதிக பிரபல்யமான பிரதமர்களின் வரிசையிலும் தற்போதைய பிரதமர் நான்காம் இடம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமான பிரதமர்கள் வரிசையில் முதலாம் இடத்தை வகிக்கின்றார். ரிசர்ச் கோ என்ற ஆய்வு நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பை மேற்கொள்ளப்பட்டுள்ளது.