Loading...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப்போட்டியே இடம்பெறும் என்றும் அதில் சஜித் பிரேமதாச இடம்பெறமாட்டார் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அலகப்பெரும ஆகிய மூவருக்கும் இடைலேயே போட்டி இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Loading...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடிக்கடி காட்டும் தயக்கம் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது தனக்கு இலகுவாக இருக்கும் என்பதால், விமான நிலையங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Loading...