Loading...
மத்திய ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாகக் கடும் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பெய்துவரும் கடும்மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 40 க்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இது குறித்து அம் மாநில செய்தித் தொடர்பாளர் சபியுல்லா ரஹிமி கூறுகையில் இக்கடும் மழைகாரணமாக ஜல்ரெஸ் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்மாவட்டத்தில் மாத்திரம் 604 வீடுகள் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.மேலும் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் நாடுமுழுவதும் 214 பேர் இயற்கை பேரழிவு காரணமாக உயிரிழந்துள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...