ஜெர்மனி 6-0 என மொரோக்கோ அணியை வீழ்த்தியது பிரேசில் பனாமாவை 4-0 என பந்தாடியது பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் இத்தாலி- அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இத்தாலி 1-0 என வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் மொரோக்கோ அணியை ஜெர்மனி துவம்சம் செய்து 6-0 என வெற்றி பெற்றது.
அதேபோல் பனாமா அணியை 4-0 என பிரேசில் வீழ்த்தியிருந்தது. இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
முதல் ஆட்டத்தில் கொலம்பியா- தென்கொரியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய நேரப்படி 11 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து- பிலிப்பைன்ஸ் அணிகள் மோதுகின்றன. மதியம் ஒன்றரை மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து- நார்வே அணிகள் விளையாடுகின்றன.