முட்டை பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கோழிப் பண்ணைகளில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இந்தப் பண்ணைகளுக்குச் சென்று தரப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கியதாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளதுடன் , இதற்கான உத்தரவுகள் கடந்த வாரம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தலா ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முட்டை ஒன்றின் விலையானது ரூபா .60 வரை விலை உயர்ந்துள்ள போதிலும் முட்டைகளை கொள்வனவு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.