நீரில் மூழ்குதல் உள்ளிட்ட விபத்துக்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்துக்கு மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம் இன்றைய தினம் (25.07.2023) அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிபுணத்துவ வைத்தியர்கள் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் வருடாந்தம் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
நீரில் மூழ்கி உயிரிழப்பு
அவர்களில் சுமார் 10 சத வீதமானோர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.
20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்களே அதிக எண்ணிக்கையில் நீரில் மூழ்கிப் பலியாகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வயது முதிர்ந்த ஒருவர் இறப்பதற்கு ஒரு அடி நீர்மட்டம் கூட போதுமானது.
உலகில் வருடாந்தம் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.