துருக்கி நாட்டில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியின் தெற்கு மாகாணமான அடானாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இஸ்தான்புல்லில் உள்ள கண்டில்லி பூகம்ப கண்காணிப்பு மையம் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
பேரழிவுகரமான நிலநடுக்கங்கள்
இந்த நிலநடுக்கம் கோசான் மாவட்டத்தில், அடானா நகரத்திலிருந்து சுமார் 64 கிமீ (40 மைல்) தொலைவில் சிரிய எல்லைக்கு அருகில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 12 கிமீ (7.46 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
துருக்கி மற்றும் சிரியாவில் 50,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற பேரழிவுகரமான நிலநடுக்கங்களுக்கு பிறகு ஆறு மாதங்களுக்குள், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.