1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டது.
தமிழ் மக்கள் இனப்படுகொலையை மறவோம் என எழுதப்பட்டிருந்த வாசகத்திற்கு அங்கு வருகைத் தந்த குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்தது.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும், மாறாக விடுதலைப் புலிகளையே இராணுவம் அழித்ததாகவும் அங்கு வருகைத் தந்த சிலர் கூறியிருந்தனர்.
இந்த அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க இராணுவ புலனாய்வு அமைப்பே வன்முறையைத் தூண்டியதாக ஆரம்ப விசாரணைகள் காட்டுகின்றன.
இறந்தவர்களின் நினைவாக விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை கால்களினால் நசுக்கும் செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டமை புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பு கூற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.