Loading...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நாளை (வியாழக்கிழமை) 4.00 மணிக்கு, கிளிநொச்சி சேவைச் சந்தை முன்றலில் கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
கறுப்பு ஜூலைப் வன்முறையில் உயிர்துறந்த உறவுகளை நினைவு கூரும் இந் நிகழ்வில் அனைத்துப் பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
Loading...
குறித்த நினைவேந்தலில் மாவை. சேனாதிராசா, ப.சத்தியலிங்கம், சிறீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன் மற்றும் அனந்தி சசிதரன், உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...