சிறிலங்கா கடற்படையினரால் கொக்கிளாய்,புல்மூடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றைய தினம் (25) நடந்த தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்கண்ட கைது நிகழ்ந்தது. தவிரவும் சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்திய 04 டிங்கிகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மீன் இனங்களின் நிலைத்திருப்பை சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கவும், கடற்சூழல் அமைப்புகளை சேதப்படுத்துவதை இல்லாது ஒழிக்கவும் சிறிலங்கா கடற்படை கடற் பகுதிகளில் வழக்கமாக ரோந்து நடவடிக்கைகளினை மேற்கொள்கிறது.
19 பேர் கடற்படையினர் கைது
கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரன்வேலி யினால், நேற்று (25) அன்று கொக்கிளாய்க்கு அப்பால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் இவர்கள் பயன்படுத்திய 04 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.
18 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் புல்மூடு, நிலாவெளி மற்றும் குச்சவெளி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 18 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், அவர்களது உடமைகளுடன் முல்லைத்தீவு கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர் .