மாத்தறை, திஹாகொட – பண்டாரத்தவெல்ல பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியம் ஒன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மாத்தறை குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட T56 துப்பாக்கி, ஒரு மகசீன், 10 T56 தோட்டாக்கள் மற்றும் 10 துரப்பண தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை
இந்த ஆயுதப்பதுக்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் மர்மமாகவே இருப்பதாகவும், இதுவரை யாரும் சந்தேகத்தின் பேரில் கூட கைது செய்யப்படவில்லை காவல்துறை உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் மாத்தறை குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மாத்தறை காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.