தற்போது நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளுடன் ஆசியாவை இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்றில் பங்கேற்பதாகவே அவர் சீனாவிற்கு செல்லவுள்ளதாக ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனா விஜயத்தினைத் தொடர்ந்து அவர் துருக்கிக்கும் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அழைப்பு
அதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் இடம்பெறவிருக்கும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.