ஆபிரிக்க நாடான சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் உள்நாட்டு போர் நிலவி வருகின்றது.
இந்தநிலையில் தலைநகர் கார்டூமிற்கு மேற்கே ஒம்துர்மன் நகரில் இராணுவ தளத்தின் முகாம் ஒன்று அமைந்துள்ளது.
இதன் மீது துணை இராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது திசைமாறி அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் விழுந்த நிலையில், அப்பாவி பொதுமக்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
அத்துடன், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சூடானில் இதுவரையில் ஏற்பட்ட மோதலில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துடன் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
துணை இராணுவத்தினரின் இச்செயற்பாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.