தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார். நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.
பிபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியில் இடம்பிடித்துள்ளார் 25 வயது வீராங்கனையான யமிலா ரோட்ரிக்ஸ். இத்தாலிக்கு எதிரான முதல் க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக களமிறங்கிய இவர், தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார்.
இதையடுத்து அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு பதிலாக போர்ச்சுகல் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தனது காலில் பச்சை குத்தியதால் அர்ஜென்டினா ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
தற்போது அர்ஜென்டினா உலகக் கோப்பை அணியில் அங்கம் வகிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு அவர் அதிக விசுவாசத்தையும் ஆதரவையும் காட்ட வேண்டும் என்று நம்பும் சில அர்ஜென்டினா ரசிகர்களிடமிருந்து இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து பேசிய யாமிலா ரோட்ரிக்ஸ், “தேசிய அணியில் மெஸ்சி எங்கள் கேப்டன், ஆனால் ரொனால்டோ எனது உத்வேகம் மற்றும் வழிபடும் உருவம் என்று நான் கூறுவதால், நான் மெஸ்சியை வெறுக்கிறேன் என்று அர்த்தம் இல்லை.
நான் எப்போது மெஸ்சிக்கு எதிரானவள் என்று சொன்னேன்? நான் சொல்லாத விஷயங்களைச் சொல்வதை நிறுத்துங்கள். நான் மிகவும் கடினமான விமர்சனங்களை சந்திக்கிறேன். நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. என்று யமிலா கூறினார்.