Loading...
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ள போதும் கடந்த 5 நாட்களாக சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
Loading...
இதன்போது வடக்கு, கிழக்கு பகுதியின் தற்போதைய நிலை மற்றும் அதிகரித்துள்ள மக்களது போராட்டங்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட விடயங்களை ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு அன்று தொடக்கம் ஜனாதிபதியை சந்திக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஜனாதிபதி தரப்பில் இருந்து எதிர்க்கட்சித் தலைவரையோ அல்லது கூட்டமைப்பையோ சந்திக்க நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
Loading...