இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றை இன்று (28ஆம் திகதி) முதல் பல்பொருள் அங்காடிகளில் இருந்து தலா 40 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர நேற்று (27ஆம் திகதி) தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சதொச ஊடாக தலா 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பொதி செய்யப்பட்ட முட்டைகள் பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஏனைய மாவட்டங்களுக்கும் முட்டை
தற்போது கொழும்பு, களுத்துறை, கம்பகா சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முட்டை விற்பனை செய்யப்படுவதாகவும், அடுத்த வார தொடக்கத்தில் இருந்து குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் முட்டை விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாள் ஒன்றுக்கு 10 ,லட்சம் முட்டைகள் விநியோகிக்க இருப்புக்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், இருப்பு குறைவடைய, தினமும் முட்டைகள் வரவழைக்கப்படும் என்றார்.