நேற்று (26) முன்தினம் நடைபெற்ற ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 23 ஆவது பட்டமளிப்பு விழாவில் மருத்துவ மாணவர் ஒருவர் 10 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவன் 19 தங்கப் பதக்கங்களில் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதற்கு முன்னர் மாணவியொருவர் 09 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதுடன், ரஜரட்ட மருத்துவ பீட வரலாற்றில் அதிகூடிய தங்கப் பதக்கங்களைப் பெற்ற சாதனை இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தரிந்து தேஷான் மாபா என்ற இந்த மாணவனின் பெற்றோரும் வைத்தியர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இருப்பாரா என்பது சந்தேகம்
இது குறித்து ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் ஜானக புஷ்பகுமாரதெரிவிக்கையில், இந்த மாணவனின் திறமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
இவ்வாறான திறமையான மாணவர் இலங்கையில் இருப்பாரா என்பது தமக்கு சந்தேகம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த மாணவன் ரஜரட்ட மருத்துவ பீடத்தில் விரிவுரையாளராக இணைந்தால், தானும் ரஜரட்ட மருத்துவ பீடத்தின் முழு பீடமும் அதற்கு தயாராக இருப்பதாக பீடாதிபதி தெரிவித்தார்.
மாணவன் தரிந்து தேஷான் மாபா வென்ற தங்கப் பதக்கங்கள்,
01 Prof. P.A.J. Perera Gold Medal for Best Performance in Biochemistry
- Prof. Malini Udupihille Gold Medal for Best Performance in Physiology
- Prof. P.A.J. Perera Gold Medal for Overall Best Performance in 2nd MBBS Examination
- Prof. Danister Weilgama Gold Medal for Best Performance in Microbiology
- Prof. Suneth Agampodi Gold Medal for Outstanding Performance in Community Medicine
- Department of Community Medicine Gold Medal for Highest Aggregate in Community Medicine
- Dr. Dhananjaya Waidyaratne Gold Medal for Best Performance in Forensic Medicine
- Dr. Vasana Mendis Gold Medal for Best Performance in Pathology
- Dr. A.B. Senavirathna Gold Medal for Best Overall Performance in 3rd MBBS Examination
- Prof. Sisira Siribaddana Gold Medal for Best Performance in Medicine