Loading...
சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2வது சுற்றில் வென்றார்.
Loading...
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் லாஸ்சி மொல்ஹிடி-ஜேப்பி பாய் ஜோடியுடன் மோதியது. இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றை எட்டியது. இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரனோய் வென்றனர்.
Loading...