Loading...
தான் ஜனாதிபதியாவதற்கு முன்னர் மூன்று தொழில்கள் செய்ததாகவும், அவற்றினை இராஜினாமா செய்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது தாயும், தந்தையும் இந்த நாட்டு அரச ஊழியர்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தென் மாகாணத்தில் இடம்பெற்ற மாகாண அரச அதிகாரிகளின் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
தான் தொடர்ந்து மாறுவதற்கு தன்னுள் காணப்பட்ட விருப்பமே அவ்வாறு இராஜினாமா செய்வதற்கு காரணமாகும்.
இன்று ஊடகங்கள் நாட்டில் நடக்கும் நல்ல விடயங்களை பார்ப்பதில்லை. பத்திரிகை மற்றும் இணையத்தள ஊடகங்கள் தங்கள் இலக்கை அடையும் நோக்கிலேயே செயற்படுகின்றன. அது சிறப்பான ஒரு அறிகுறி அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...