கனடாவில் பெண் ஒருவர் 40 ஆண்டுகளாக லொட்டரிச் சீட்டு வாங்கிவந்த நிலையில், அவருக்கு பெரும் தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kamloops நகரில் வாழும் Rhonda Malesku என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு லொட்டரியில் 35 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.
பெரிய தொகை
இந்த சம்பவம் குறித்து Rhonda கூறுகையில், தொடர்ந்து 40 ஆண்டுகளாக லொட்டரிச் சீட்டு வாங்கிவந்தாலும், தனக்கு பெரிய தொகை பரிசாகக் கிடைக்கும் என எதிர்பார்த்ததேயில்லை.
Rhondaவுக்கு, தனக்கும், தன் மகன் மற்றும் மகளுக்கும் ஆளுக்கொரு வீடு கட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.
தற்போது லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டத்தால் அவரது கனவு நிறைவேற உள்ளது.
அத்துடன், கேரவன் இணைக்கப்பட்ட ட்ரக் ஒன்றை வாங்கி குடும்பமாக இன்பச் சுற்றுலா செல்லவும் திட்டம் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.