Loading...
டெல்லிக்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமருடனான சந்திப்பின் போது, மருத்துவ கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வு எழுதுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களித்தல் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பொதுமக்களின் எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் என்பன குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
Loading...
குறித்த டெல்லி விஜயத்தின் போது முதலமைச்சர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Loading...