Loading...
டுபாயில் இருந்து போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் பாதாள உலக தலைவரின் முக்கிய உதவியாளர் ஒருவரை கலால் திணைக்களம் கைது செய்துள்ளது.
40 கிராம் ஹெரோயின், வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் 3 ரவைகளுடன் அவர் கைது செய்யப்பட்டதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...
குறித்த நபருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி அனுரகுமார அலுத்கே தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...