திஸ்ஸமஹாராம – கதிர்காமம் பிரதான வீதி 6 இல் கனுவ பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் வானொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த அவர்களது 15 வயது மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கான காரணம்
வானின் சாரதி அதிக மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காம பூஜைக்காக கிரிந்தேயிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் சங்க கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கி தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.