Loading...
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 04.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
குறித்த பேருந்தில் 100 பேர் வரை பயணித்துள்ளதுடன் விபத்தில் 18 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...