Loading...
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அஸ்வெசும நலத்திட்டத்தின் முதல் தவணை இம்மாதம் முதல் வாரத்திற்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரிச் சபை தெரிவித்துள்ளது.
95 சதவீத பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கு அரச வங்கிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அச்சபை தெரிவித்துள்ளது.
Loading...
பயனாளிகளுக்கு 15,000 ரூபாய் 8,500 ரூபாய் மற்றும் 5,000 ரூபாய் மதிப்புகளின் கீழ் தவணை பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பெற்றுக்கொள்ளப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆய்வு செய்த பின்னர் அஸ்வெசும நலத்திட்டத் திட்டத்திற்கு மேலதிக பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...