இதனால், இவருக்கு கதாநாயகி வாய்ப்புகளைவிட, குத்துப்பாடலுக்கு ஆட வரும் வாய்ப்புகள் அதிகமானது. ஒருகட்டத்தில் அதுவும் குறைந்துபோக, சினிமாவில் இருந்து ஒதுங்கி, தனது உடல் எடையில் கவனம் செலுத்த தொடங்கினார். சிறிய இடைவெளிக்கு பிறகு, பழைய நமீதாவாக திரும்பி வந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
தற்போது பரத் நடிப்பில் உருவாகி வரும் ‘பொட்டு’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நமீதா நடித்து வருகிறார். தனது ரசிகர்களை செல்லமாக ‘மச்சான்ஸ்’ என்று அழைக்கும் நமீதா, தற்போது பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து படிக்கும்போது, இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை பழச்சாறு, இளநீர் அல்லது தண்ணீர் குடியுங்கள். இது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும்’ என்று கூறியுள்ளார்.