தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச மன்னிப்புக்கோரியுள்ளார். தேசிய கீத விவகாரம் தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவொன்றினையிட்டு மன்னிப்புக்கோரியுள்ளார்.
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ஆரம்பத்தின் போது தேசிய கீதத்தை பாடிய விதத்தில் தான் கவனம் செலுத்தியதாகவும் பாடகி உமாரா சின்ஹவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நேர்ந்த தவறினால், யார் மனதேனும் காயப்பட்டாலோ அல்லது புண்படுத்தப்பட்டிருந்தாலோ அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா இன்று விசாரணைக்காக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் உதவி செயலாளர் ஆகியோர் இந்த விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.