கடந்த சில வாரங்களில் காலியில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
எல்பிட்டிய அமுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கொழும்பில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் சென்றுள்ளார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் சென்றுள்ளார். கொழும்பில் இருந்து சென்ற ஜனாதிபதி குழுவினரை, தென் மாகாண சபை முதமைச்சர் விஜயலால் டி சில்வா என்பவர் வரவேற்றுள்ளார்.
இதன்போது அங்கு இடம்பெற்ற உரையாடல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
“எனக்கு தற்போது காலியில் வீடு ஒன்று தேடிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன்போது அங்கிருந்தவர்கள் திகைத்துப் போயுள்ளனர்.
ஏன் சேர் காலியில் வீடு? என அதிர்ச்சியுடன் ஷான், ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
“நான் கடந்த பல நாட்களாக காலிக்கு வந்து செல்கின்றேன். நான் தங்குவதற்கு வீடு ஒன்றை பெற்றுக்கொடுக்குமாறு கயந்த நீங்களாவது ஷானிடம் கூறுங்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட அனைவரும் சிரித்துக் கொண்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று சமகால ஜனாதிபதியும் ஒவ்வொரு நகரங்களிலும் மாளிகையை அமைக்க முயற்சிக்கின்றாரோ என அங்கிருந்தவர்கள் அச்சம் கொண்டதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.