என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன். மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும். இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பைக்கான இந்திய அணி உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
அதேவேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்த தங்களது சொந்த கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மிடில் ஆர்டரில் இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களமிறங்களாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இரண்டு விக்கெட் விழுந்த போதும் அவர் மிடில் ஓவர்களில் அசராமல் அடித்து ஆடியதை பார்த்து பிரமித்து விட்டேன். அவரது பேட்டிங்கால் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். என்னை பொருத்தவரை அவர் உலக கோப்பை தொடருக்காக தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன். மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலையோ களமிறக்கினால் அது தவறான முடிவாகவே அமையும்.
ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரரானவர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் ஸ்பின்னர்களை சரியாக கையாலும் சாம்சனை அந்த இடத்தில் களமிறக்குவது தான் நல்ல முடிவாக இருக்கும். சாம்சன் சுழற்பந்து வீச்சாளர்களை இலகுவாக எளிதில் எதிர்கொள்கிறார். அதேபோன்று இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களையும் சாமர்த்தியமாக விளையாடுகிறார். எனவே உலகக்கோப்பை அணி தேர்வில் சஞ்சு சாம்சன் விஷயத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு முகமது கைப் கூறினார்.