இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13 கொண்டிருக்கிறது. இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் FHD+ 120Hz 10-பிட் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
சைபர் மெக்கா டிசைன் மற்றும் எல்இடி லைட் எபெக்ட்களை கொண்டிருக்கும் புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ, ஸ்மார்ட்போனில் இசைக்கப்படும் பாடல் மற்றும் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்ப எல்இடி-க்கள் ஒளிரும். இத்துடன் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13 வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒரு ஒஎஸ் அப்டேட், இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.
இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ அம்சங்கள்:
6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 10-பிட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர் ARM G77 MC9 GPU 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13 டூயல் சிம் ஸ்லாட் 108MP பிரைமரி கேமரா 2MP மேக்ரோ லென்ஸ் 2MP டெப்த் சென்சார் 32MP செல்பி கேமரா இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஹை-ரெஸ் ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை ப்ளூடூத் 5.2 யுஎஸ்பி டைப் சி 5000 எம்ஏஹெச் பேட்டரி 45 வாட் பிடி 3.0 பாஸ்ட் சார்ஜிங் இந்திய சந்தையில் புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சைபர் பிளாக் மற்றும் மிரேஜ் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.