Loading...
உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணைகளை ஜேர்மன் வழங்கவுள்ளதாக வெளியான தகவலை ஜேர்மன் மறுத்துள்ளது.
இந்நிலையில் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணை தொடர்பாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கருத்து தெரிவிக்கையில்,
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை வழங்குவது தற்போதைக்கு எங்களுக்கு முதல் முக்கியத்துவமானது என்று நாங்கள் நம்பவில்லை.
அத்துடன் இதனை உக்ரைனுக்கு நாங்கள் வழங்க மறுக்கவில்லை. எங்களுடைய கூட்டாளி அமெரிக்காவும் உக்ரைனுக்கு நீண்ட தூர கப்பல் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எங்களுடைய ஏவுகணைகள் சிறப்பு வரம்புகளை கொண்டுள்ளது என்றும் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
Loading...