முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த தயாராகி வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் அனைத்துக்கும் yes Sir என்று கூறிக்கொண்டு இருந்தோம். தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிர்வாகத்தின் கீழ் எமக்கு பெரிய சுதந்திரம் இருக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரதிபலனாகவே புதிய கட்சியை ஆரம்பித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த பார்க்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி கடந்த வாரம் சிங்கப்பூர் சென்றிருந்த போது பிரதமர் ரணிலுடன் இரகசியமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.