Loading...
வடமேற்கு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டுமென பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சுமார் 40,ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் தண்ணீர் கிடைக்காமல் நிர்க்கதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இந்த நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்களின் ஆதரவு கிடைக்கவில்லை எனவும் கவலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பந்தப்பட்ட சகல துறைகளுடனும் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...