குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வின் போது பல நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவர்களுக்கு தலா 1500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலையொன்றின் 6 பாடசாலை மாணவர்களுக்கு அபராதம் விதித்த நீதவான், இனிமேல் இவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
காதல் தொடர்பு
காதலன் என்று கூறப்படும் சந்தேகத்திற்குரிய மாணவன், அதே வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்த நிலையில் பிரிந்துள்ளார்.
இந்நிலையில் மாணவியின் பிறந்த நாள் அன்று அவரின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பியுள்ளார்.
தண்டனை
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306 ஆவது பிரிவின்படி அவர்களுக்கு தண்டனை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், குறித்த மாணவர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.