Loading...
நீர் கட்டணத்தை திருத்துவதற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் வசந்த இளங்கசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சிடம் இருந்து அனுமதி
இதேவேளை ஒவ்வொரு வருடமும் மின்சார கட்டணத்தை திருத்தும் வகையிலும் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Loading...
இதன்படி எதிர்காலத்தில் நிதியமைச்சிடம் இருந்து இதற்கு தேவையான அனுமதி பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீர் கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Loading...