இன்னும் சில வருடங்களில் நாட்டின் ஜனரஞ்சக தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதால், தமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதியே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
களுத்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்பதால், கட்சி எடுக்கும் தீர்மானத்தை அவரால் எதிர்க்க முடியாது எனவும் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த மாநாட்டில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பயன்படுத்தி மேற்கொண்ட தவறுகள் சம்பந்தமாக விமர்சனங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட போதும் அதற்கு பின்னர் பல முறையும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.