Loading...
புராணங்கள் மற்றும் சாஸ்திரங்கள் கூறுவது படி, ஒருவரை மரணம் நெருங்குவதற்கு முன்னரே ஒருசில அறிகுறிகள் வெளிக்காட்டும் என்று கூறுகிறது.
Loading...
மரணம் நிகழ்வதற்கு முன் தோன்றும் அறிகுறிகள் என்ன?
- வானில் உள்ள துருவ நட்சத்திரங்கள் ஒருவருடைய கண்களுக்கு தெரியாமல் இருந்தால், அவர்கள் கூடிய விரைவில் இவ்வுலகை விட்டு சென்று விடுவார்கள் என்று வேதங்கள் கூறுகின்றது.
- சூரியனை பார்க்கும் போது, அதில் திரிக்கப்பட்டதை போன்று ஒரு உருவம் உங்கள் கண்களுக்கு தென்பட்டால், அவர்களுக்கு 11 மாதங்களில் இறந்து விடுவார்களாம்.
- ஒருவர் நடக்கும் போது, மணலில் பாத சுவடுகள் முழுமையாக தெரியாமல் இருந்தால், அவர்கள் 7 மாதங்களில் இறந்து விடுவார்கள் என்று வேதங்கள் கூறுகிறது.
- கழுகு அல்லது காகம் ஒருவரின் தலையில் அமர்ந்தாலோ அல்லது உரசினாலோ, அவர்களுக்கு அல்லது அவர்களின் உறவில் துக்க காரியம் நடக்கப் போகிறது என்ற அர்த்தம்.
- ஒருவரது கண்களுக்கு தன்னைச் சுற்றி ஒரு திரிக்கப்பட்ட உருவத்தைக் காண நேரிட்டால், அவர்கள் 4 மாதங்களில் இறந்து விடுவார்கள் என்று வேதங்கள் கூறுகின்றது.
- வானில் மழை வருவதற்கான அறிகுறி ஏதும் இல்லாமலே ஒருவருக்கு மின்னலைக் காண்பதை போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் 3 மாதங்களில் இறந்து விடுவார்கள் என்று அர்த்தம்.
- ஒருவரின் பாதம் குளித்த உடனேயே வறட்சி அடைந்து விட்டால், அவர்கள் அடுத்த 10 நாட்களில் இறந்து விடுவார்கள் என்று அர்த்தம்.
- வீட்டில் ஏற்றி வைத்த விளக்கு அணையும் போது, அதிலிருந்து வரும் வாசனையை ஒருவரால் நுகர முடியவில்லை என்றால் அவர்கள் சில காலம் மட்டுமே உயிருடன் இருப்பார்கள் என்று அர்த்தம்.
Loading...