Loading...
மேற்கு ஜார்ஜியாவிற்கு அருகில் உள்ள ராச்சா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அந்நாட்டு உள்துறை அமைச்சு நேற்று(04.08.2023) உறுதிப்படுத்தியுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள்
மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கைகளில் இதுவரை ஆறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
Loading...
இந்த நிலையில்,140 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இரு ஹெலிகப்டர்களும் மோப்ப நாய்களும் மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...