Loading...
1995-ஆம் ஆண்டு ரஜினி-நக்மா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘பாட்ஷா’. ரஜினி பட வரிசையில் மிகப்பெரிய மாஸாக அமைந்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவர், டான் என்ற இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு, மீண்டும் வெளியாக தயாராக இருக்கிறது. வருகிற மார்ச் 3-ந் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தை ஜப்பானிலும் வெளியிட முடிவு செய்திருந்தனர். ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவருடைய எந்தவொரு படம் வெளியானாலும் ஜப்பானிலும் சப்-டைட்டிலுடன் வெளியிடப்படும்.
Loading...
அந்த வரிசையில், தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்ட ‘பாட்ஷா’ படம் ஜப்பானில் திரையிடப்பட்டுள்ளது. கடந்த பிப்.26-ந் தேதி ஜப்பானில் இப்படம் சப்-டைட்டிலுடன் ரீலீசாகியுள்ளது. ரஜினியின் புதிய படத்திற்கு கிடைக்கும் அளவுக்கு இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்துள்ளது.
Loading...