வாதுவ கல்லூரி வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் வாதுவ, தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என கூறப்படுகின்றது.
குறித்த இளைஞன் வாத்துவ பாடசாலை பகுதியிலிருந்து வாதுவ நோக்கி மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார்.
இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி 25 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சுவரில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.