மலையாளம், தமிழ் என பல மொழி படங்களை இயக்கியவர் சித்திக். இவர் விஜய்யின் ‘காவலன்’ திரைப்படத்தை இயக்கினார். பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், ‘சாது மிரண்டா’, ‘காவலன்’ படத்தையும் இயக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் சித்திக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் சித்திக் விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.