Loading...
நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பத்தினால் இந்த நாட்களில் சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே குழந்தைகளை வெயிலில் விளையாட விடக்கூடாது எனவும், அதிகமாக சோர்வடையாது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தல் விடுத்துள்ளார்.
Loading...
மேலும், பாடசாலை குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அவர்களுக்கு அடிக்கடி நீராகாரங்களை கொடுக்க வேண்டும் என்றும், பாடசாலையில் விளையாட சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் குழந்தைகளை அடிக்கடி தண்ணீரில் வைத்திருப்பதும் முக்கியம் என்றும் வைத்திய நிபுணர் பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியுள்ளார்.
Loading...