அனைத்து வகை ரத்தத்திலும் நோய் எதிர்ப்பு ஊக்கியாக (ஆன்டிஜென் – Antigen) என்ற சிறப்பு வகை ஆன்டிபாடி புரதம் உள்ளது.
ஆனால் AB வகை ரத்தத்தில் மட்டும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் ஆன்டிபாடி புரதங்கள் இல்லை.
இதேபோல ஒவ்வொரு வகை ரத்தத்திலும் வெவ்வேறு வகை குறை மற்றும் நிறைகள் உள்ளது.
இது குறித்து நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த வகை இவை ஒவ்வொன்றிற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் ஆய்வுகள் வியப்பான சில தகவல்களை வெளிப்படுத்தி உள்ளது.
ரத்த வகையை பற்றி ஆய்வுகள் கூறுவது என்ன?
காலரா நோயைத் தாங்கும் சக்தி ரத்தம் A மற்றும் B வகைக்கு உள்ளது.
ஆனால் O வகை ரத்தப் பிரிவைக் கொண்டவர்களுக்கு தீவிரமாக காலரா தாக்கும்.
மற்ற ரத்த வகையை விட பிளேக் நோயினை தாங்கும் சக்தி B ரத்த வகையினருக்கு மிகக் குறைவாக உள்ளது.
பிளேக் நோயினைத் தாங்கும் சக்தி கொண்ட A வகை ரத்தம் உடையவர்கள் இருதய நோய் மற்றும் சின்னம்மை நோயின் பாதிப்பினை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் இருதய நோய் மற்றும் காச நோயின் தாக்கம் ஏற்படாமல் இருக்க O ரத்த வகைக்கு சற்று கூடுதல் பாதுகாப்பு உள்ளது.
மேலும் பல்வேறு நோய்களின் தாக்கம் ஏற்படுவதற்கு, ரத்தப் பிரிவை விட மற்ற காரணிகளும் காரணமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றது.