Loading...
இலங்கை மீனவர்கள் மூன்று பேர் படகு பழுதடைந்ததால் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – எழுகைதீவில் இருந்து கடந்த 6ஆம் திகதி காலை 9 மணியளவில் குறித்த மீனவர்கள் பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர் எனவும், நண்பகல் 2 மணியளவில் அப் படகின் எஞ்சின் பழுதடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதனையடுத்து நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அவர்கள் கரையொதுங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் ஆனைகோட்டை, குருநகர் மற்றும் வல்வட்டிதுறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...