வாழைப்பூ சாப்பிடுவதால் என்னென்ன பல்வேறு நன்மைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை வாழைப்பூ சரி செய்யும். இரத்தத்தில் தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை இருந்தால் சரி செய்யும் வாழைப்பூ இரத்த ஓட்டம் சீராகவும் உதவி செய்யும்.
இரத்த அழுத்தம் இரத்தசோகை உள்ளவர்கள்
வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் உடல் வெப்பநிலையை குறைக்க நினைப்பவர்கள் மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் இரத்த அழுத்தம் இரத்தசோகை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து
குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து வாழைப்பூ என்று சொல்லலாம், வாழைப்பூ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு நன்றாக வேக வைத்து உப்பு போட்டு அவித்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடலாம். வாழைப்பூவை வேகவைத்த சாறையும் அருந்தலாம்.