கடந்த 17 ஆம் திகதி பிரபல நடிகை பாவனா, கார் ஓட்டுநர்கள் 4 பேரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட சுனில் குமார் மற்றும் விஜேஸ் ஆகிய இருவரையும் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பொலிசார் கைது செய்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் முதலில் கைதான மார்ட்டின், மணிகண்டன், சலீம், பிரதீஷ் ஆகியோரை பாவனா அடையாளம் காட்ட பொலிசார் ஏற்பாடு செய்தனர்.
காக்கநாடு ஜெயிலில் நேற்று குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
25 பேருடன் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் மார்ட்டின், மணிகண்டன், சலீம், பிரதீஷ் ஆகியோரை பாவனா அடையாளம் காட்டினார். இதனை பொலிசார் பதிவு செய்து கொண்டனர்.
கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சுனில்குமார், விஜேஷ் இருவரையும் 10 நாள் பொலிஸ் காவலில் எடுக்க பொலிசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.