Loading...
சர்ச்சைக்குரிய நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எம்.டி.எப்.இ (MTFE SL) நிறுவனத்தின் தலைவர்கள் வெளிநாடு செல்லும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் தொடர்பில் மத்திய வங்கி ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், குறித்த நிறுவனத் தலைவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Loading...
பிரமிட் திட்ட பணிகள்
மேலும், இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் பிரகாரம் இந்த நிறுவனத்தின் பணிகள் பிரமிட் திட்ட வடிவில் இருப்பதாக மத்திய வங்கி குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
Loading...