Loading...
2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் உடன் ஒப்பிடுகையில் 261 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையில் மொத்தம் 3,363.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...